திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவர், அரசு வழங்கும் தொகுப்பு வீடு கட்டுவதற்கு மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதே அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் பிரசன்னா, ரூபாய் 4,500 வழங்கினால் உடனடியாக வீடு கட்டுவதற்கு ஆணை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து நமச்சிவாயம், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தில் மறைந்திருந்து , நமச்சிவாயத்திடமிருந்து பிரசன்னா 4 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சப் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பிரசன்னா இதன் பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்!