திருவள்ளூர்:திருத்தணி அருகே அம்மா நகரும் நியாயவிலைக் கடையை அமைச்சர்கள் பா. பெஞ்சமின், மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவாலங்காடு ஒன்றியம் கோதண்டராமபுரம் காலனியில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா. பெஞ்சமின், மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று, நியாய விலைக் கடை சேவையைத் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள், கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நியாயவிலைப் பொருள்கள் வாங்க நெடுந்தூரம் சென்றுவருவதால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் 906 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.