திருவள்ளூர்:முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (செப்.30) ஆய்வு மேற்கொண்டார்.
கோயிலில் பக்தர்களுக்கு காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கோயிலில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பக்தர்களுக்கு பரிமாறப்படும் உணவுகள் தரமாக இருக்கிறதா எனக் கண்டறிந்தார்.
மேலும், முருகன் கோயிலில் இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என முதலமைச்சர் அறிவித்ததையடுத்து, கட்டணமில்லா திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.