திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டு குடமுழுக்குப் பணிகள் குறித்து கோயில் அறங்காவலர் குழுவிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 12 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பழமை மாறாமல் உள்ளது. இரண்டு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் குளத்தைச் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதுவரை சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான கோயில் நிலமும், 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.