தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல் - அமைச்சர் நாசர் - thiruvallur sanu nazar press meet

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் இன்று (ஜூலை 23) பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம் உள்ளிட்ட எட்டு கோடியே ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் கூறினார்.

minister-samu-nazar-who-provided-welfare-assista
minister-samu-nazar-who-provided-welfare-assista

By

Published : Jul 23, 2021, 4:22 PM IST

திருவள்ளூர்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் அழைப்பாளராக அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட எட்டு கோடியே ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிறப்பு அலுவலர்கள் நியமனம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றிவருகிறார்.

அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 16 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 14 ஆயிரத்து 139 மனுக்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர்
இதில் மூன்றாயிரத்து 17 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. இரண்டாயிரத்து 763 மனுக்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரத்து 646 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு அலுவலர்களை நியமித்து அவர்கள் இந்த மனுக்களை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள். இந்த மனுக்கள் அனைத்தையும் 100 நாள்களுக்குள் தீர்வு காண பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details