நாடு முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவிக்கும்விதமாக ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்தாண்டு கரோனா தொற்றின் காரணமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்டங்களில் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.