தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருவேற்காடு, காடுவெட்டி பகுதி மக்களுக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தின் சார்பாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று சுமார் 500 குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பொருளாதாரத்தில் ஏற்படவிருந்த மிகப்பெரிய தாக்கத்தை சீராக்க உதவும். கட்டுமானத் தொழில்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் வெளிமாநில தொழிலாளர்களின் இடம்பெயர்வு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.