திருவள்ளூர்:திருத்தணி பகுதியில் மிக அதிக அளவில் 159 மில்லிமீட்டர் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு பாய்ந்து செல்கிறது. பெரும்பாலான பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் சூழ்ந்து மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் திருத்தணி புதூர் அருகே உள்ள நந்தி ஆற்றங்கரையில் குடிசைகள் அமைத்துக் கொண்டு வசித்துவந்த 20 இருளர் இன குடும்பத்தினர் கடும் வெள்ளப் பெருக்கால் ஆற்றங்கரையில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களை அலுவலர்கள் பாதுகாப்பாக மீட்டு தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானவசதிகள் செய்யப்பட்டன.
டிராக்டரில் சென்று அமைச்சர் நாசர் நிவாரண பொருள்கள் வழங்கல் இதனையடுத்து இன்று (நவம்பர் 23) நந்தி ஆற்றங்கரையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள இருளர் இன மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்டப் பொறுப்பாளர் எம். பூபதி ஆகியோர் டிராக்டரில் சென்று இருளர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கினர்.
மேலும் இலவச வீட்டுமனைப் பட்டா, வீடுகள் கட்டப்படும் என்றும், அடிப்படை வசதிகள் மின்சாரம், சாலை வசதிகள் செய்ய தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Cylinder Blast: வெடித்துச் சிதறிய சிலிண்டர் - ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!