தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கே என்ன தெரிகிறது?: தரையோடு தரையாக படுத்து சோதனை செய்த அமைச்சர்! - Giant valve burst damage

ஆவடி மாநகராட்சிக்கு குடிநீர் செல்லும் ராட்சத வால்வு வெடித்து பாதிப்படைந்த பகுதியை அமைச்சர் நாசர் தரையில் படுத்து ஆய்வு செய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரையோடு தரையாக படுத்து சோதனை செய்த அமைச்சர்!
தரையோடு தரையாக படுத்து சோதனை செய்த அமைச்சர்!

By

Published : Dec 26, 2022, 6:31 PM IST

Updated : Dec 26, 2022, 7:29 PM IST

குடிநீர் செல்லும் ராட்சத வால்வு வெடித்து பாதிப்படைந்த பகுதியை அமைச்சர் நாசர் தரையில் படுத்து ஆய்வு

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது, திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலிருந்து ஆவடியின் பல்வேறு பகுதிகளுக்கு 50 செ.மீ விட்டம் கொண்ட ராட்சத குழாயில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கடந்த புயலின் காரணமாக, அதில் ஏற்பட்ட உயர் அழுத்தத்தால் ராட்சத வால்வின் உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் லிட்டர் நீரானது சாலையில் வழிந்தோடியது. இதனையறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது உடனடியாக ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அமைச்சர் நாசர் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதி செய்ய சாலையில் தரையோடு தரையாக படுத்து வால்வு உடைந்த பகுதியை பார்வையிட்டு, பாதிப்படைந்த இடத்தை உறுதி செய்தார். இந்த செயல் கூடியிருந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் ராட்சத வால்வினை சரி செய்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நிலையில், தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:"பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் நல்லக்கண்ணு"

Last Updated : Dec 26, 2022, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details