திருவள்ளூர்: மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன வளாகத்தில் பனை விதை நடுதல், மூலிகைப் பண்ணை அமைத்தல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நூலை வெளியிட்டார்.
பின்னர் பனை விதை, மரக்கன்றுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் நட்டனர்.