கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு சார்பிலும் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் கரோனா வார்டுகளுக்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே.11) ஆய்வு மேற்கொண்டார்.