தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறுமையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய அமைச்சர்! - minister helped poor people

திருவள்ளூர்: வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவற்றை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.

வறுமையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
வறுமையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

By

Published : Apr 8, 2020, 6:12 PM IST

கரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதையும் முடக்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலையிழந்த விளிம்புநிலை மக்கள் பசியால் வாடும்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு உதவும் வகையில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், சிற்றம் சீனிவாசன், ரமேஷ், நிர்வாகிகள் இணைந்து ஐந்து கிலோ அரிசி, மளிகை பொருள்கள், காய்கறி வகைகள், ரூபாய் 500 ஆகியவை அடங்கிய தொகுப்பை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கினர்.

வறுமையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நியாயவிலைக் கடைகள் மூலம் ரூபாய் ஆயிரம், அத்தியாவசிய மூலப்பொருள்கள் ஆகியவை வழங்குகிறார். எங்களது சொந்த முயற்சியில், இதுபோல் அருகிலுள்ள மக்களுக்கு நாங்கள் இயன்றவரை உதவிகளை செய்துவருகிறோம்" என்றார்.

கரோனா வைரஸ் யாருக்கும் பரவாமலிருக்க, "அனைவரும் தனித்திருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள், வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:உணவின்றி தவிக்கும் மக்கள்: கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details