தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 1:37 PM IST

Updated : Sep 18, 2019, 4:27 PM IST

ETV Bharat / state

'முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்து 341 கோடி ரூபாய் முதலீடு...!' - அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூர்: இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சத்து 341கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் சிறு, குறு தொழில்களில் 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

minister-benjamin-speech-anna-birthday-function-in-madhuravoyal

சென்னை மதுரவாயலில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் பென்ஜமின், அதிமுக அரசின் பல்வேறு நல திட்டங்களை பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "உலக முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாட்டில் மூன்று லட்சத்து 341 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு தொழில்களில் 32 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்துவருவார்.

அமைச்சர் பென்ஜமின் பேச்சு

தமிழர்கள் அனைத்தையும் எளிதில் கற்கும் திறன் பெற்றவர்கள். அதனால்தான் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பொறியாளர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு துறைகளில் சாதித்துவருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டுதான் மற்ற நாடுகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருகின்றனர்" என அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதால் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Last Updated : Sep 18, 2019, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details