தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2020, 5:43 PM IST

ETV Bharat / state

‘24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும்’ - அமைச்சர் பெஞ்சமின்!

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டிராஜன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ, திருத்தணி எம்எல்ஏ, பொன்னேரி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது, “முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவே திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகம் சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 15 மாநில எல்லைகள், 20 மாவட்ட எல்லைகள் ஆகிய இடங்கள் மூடிவைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநில மக்கள் உள்ளே நுழையாத படியும் மாவட்டத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லாமல் கண்காணிக்கப்படுகின்றனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்காக 690 படுக்கைகளும் 46 அறைகளும் தயார் நிலையில் உள்ளன. 58 நபர்கள் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக 1955 தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் படி ஏற்படுத்தப்பட்டு பணியாளர்கள் முழுநேரமும் பணியாற்றி வருகின்றனர். கட்டுப்பாட்டு அறையில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகம் கட்டுப்பாட்டு அறை (04427664177, 04427666746, 9444317862) ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின்

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடங்களை அமைச்சர் பெஞ்சமின் கிருமி நாசினி தெளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் துரைக்கண்ணு

ABOUT THE AUTHOR

...view details