திருவள்ளூர்:அரக்கோணம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் சந்தோஷ் (13). தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று(ஜூலை 29) காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சந்தோஷ் மாலை வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
’அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதியின் ரசிகர் மன்றத்தை மட்டுமே கவனிக்கிறார்..!’ - அதிமுக ரவி எம்.எல்.ஏ இதைக்கண்ட உறவினர்கள் சந்தோஷை மீட்டு, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சந்தோஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுவனை அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி இன்று(ஜூலை 30) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளக்கறிச்சி மாணவி தற்கொலையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தற்கொலையும் தற்கொலை முயற்சி சம்பவங்களும் அதிகரித்துவிட்டன.
இந்த விடியா திமுக அரசு தற்கொலைக்கான காரணத்தை ஆராயவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சாரக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலினின் சினிமா படங்களையும், ரசிகர் மன்றங்களையும் மேற்பார்வையிடுவதிலேயே கவனம் செலுத்திவருகிறார். பள்ளிக் கல்வித்துறையை கண்டுகொள்வதில்லை. இந்த ஆட்சியில் மாணவ மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
இந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ நேரில் வந்து ஆறுதல் சொல்லவில்லை. மாணவர்களை பற்றி கவலைப்படவில்லை. இதைத் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இனி வரும் காலங்களில் மாணவர்கள் தற்கொலை நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரம் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை