பத்தாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புல்லரம்பாக்கம் காவல் நிலையம் வரை நடைபெற்றது.
மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் ஆய்வாளர் கண்ணபிரான் குடிநீர் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்து தானும் பங்கேற்று நடந்துசென்றார்.