சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி வறுமையில் வாடி வரும் இந்தத் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களது சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்று வருகின்றனர்.
அவர்களை ஆந்திர எல்லையான பனங்காடு என்னும் பகுதியில் அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர் பட்டினியால் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தண்ணீர் தெளித்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.