மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆர் ரசிகர்கள், அதிமுகவினர், பொதுமக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒருபகுதியாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நேசன் தலைமையில், நகர மன்ற முன்னாள் தலைவர் கமாண்டோ பாஸ்கர், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.