தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில், பசியால் அழுகிய மீன்களை தின்று மனநிலை பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு - Tiruvallur district news

திருவள்ளூர்: மனநிலை பாதிக்கப்பட்ட நபர் பசியால் அழுகிய மீன்களை தின்று, ஜீரணமாகாத நிலையில் உயிரிழந்தார்.

பசியால் அழகிய மீன்களை திண்று மனநிலை பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
பசியால் அழகிய மீன்களை திண்று மனநிலை பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

By

Published : Oct 31, 2020, 3:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மிகப்பெரிய மீன்பிடி பகுதியாகும். இங்கு ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிகின்றனர்.

இவர்களுக்கு மீனவர்கள், வியாபாரிகள் அவ்வப்போது உணவளிப்பார்கள். இந்நிலையில், இன்று (அக்.31) அப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

உடனே மீனவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்வில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் பசியால் அழகிய மீன்களை தின்றுள்ளார். அது அவருக்கு ஜீரணமாகாததால் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: நெல்லை அரசு உணவு குடோனிலிருந்து வரும் வண்டுகளால் மக்கள் அவதி

ABOUT THE AUTHOR

...view details