திருவள்ளூர் மாவட்டம் இறையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (45) இவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மப்பேடு டாஸ்மாக் மதுபானக்கடை அருகேயுள்ள காலி மைதானத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மப்பேடு காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலி மைதானத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலம் சொக்கலிங்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழிலில் ஏற்பட்ட தகராறில் யாரேனும் இவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சொக்கலிங்கம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுவனை பலியிட்ட தாய்மாமன்! - குழந்தை வரம்வேண்டி நடந்த கொடூரம்!