திருவள்ளூர்:மெய்வழி மத வழிபாடு, அதன் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என 30க்கும் மேற்பட்ட மெய்வழி மதத்தினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், மெய்வழி மத வழிபாடை இழிவு செய்யும் வகையில் உள்ள குறிப்பிட்ட காணொலியை நீக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மெய்யடியார் மோகன், " நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் மெய்வழி சபை மெய்வழி ஆண்டவரை வணங்கிவருகிறோம்.