தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருந்துக்கான மூலப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து! - மருந்துப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர்: மின் கசிவின் காரணமாக நியூரோ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருவள்ளூரில் தீ விபத்து  மருந்துப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து  pharma company fire accident
திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

By

Published : Feb 26, 2020, 10:46 AM IST

திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மருந்து மாத்திரைகளுக்கான மூலப் பொருட்களைத் தயாரிக்கும் நியூரோ தொழிற்சாலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கொளுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமானதாக தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மின்கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:விருது பெற்ற நாவலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details