சென்னை ஆவடியில் விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படைக்கு சொந்தமான 52 ஏக்கர் நிலம் 30 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஏர் கமாண்டோ ராஜேந்திரா தலைமையில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆவடியில் விமான படை சார்பாக ஏழை மக்களுக்கு மருத்துவ முகாம்! - indian airforce
திருவள்ளூர்: ஆவடியில் விமானப் படை அதிகாரிகள் சார்பில் விமான தளத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆவடி
இந்நிலையில் அங்கு குடியிருந்தவர்கள் ஏழை எளிய மக்கள் என்பதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று இடம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, மூத்த மருத்துவ அதிகாரி சரிதா பன்வர் தலைமையில் 8 மருத்துவர் கொண்ட குழுவுடன் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் உடலை பரிசோதித்து பயன்பெற்றனர்.