தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் - mediator paid Rs 7 lakh for the job

திருவள்ளூர்: தேர்வின்போது இடைத்தரகரிடம் ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

paid Rs 7 lakh for the job
paid Rs 7 lakh for the job

By

Published : Feb 11, 2020, 8:52 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வின்போது இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து 20க்கும் மேற்பட்டோர் வேலை வாங்கி பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிந்து வருவதாக குற்றப்பிரிவு துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பணஞ்சேரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சென்னை முகப்பேரில் சேர்ந்த செந்தில்ராஜ், அத்தங்கிகாவனூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் சுயம்பு ராஜ் ஆகிய இருவரை குற்றப்பிரிவு புலனாய்வு துறை அலுவலர்கள் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின்போது இடைத்தரகர் ஒருவர் மூலம் ஏழு லட்ச ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள்

இதேபோன்று பணம் கொடுத்து பணியில் சேர்ந்த மற்ற கிராம நிர்வாக அலுவலர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

இதையும் படிங்க: பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் முதலை வேட்டை: ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details