தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைச்சிக் கடையில் பணிபுரிந்த நபர் அடித்துக் கொலை - காவல்துறை விசாரணை

திருவள்ளூர் : சுங்குவார்சத்திரம் அருகே இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்த நபரை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

meat-shop-worker-beaten-to-death-police-investigation
meat-shop-worker-beaten-to-death-police-investigation

By

Published : Nov 24, 2020, 10:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). இவர் அப்பகுதியிலுள்ள இறைச்சிக் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (நவ.24) சுங்குவார்சத்திரம் சாலையில் நாகராஜை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மப்பேடு காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மெப்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் புதுப்பட்டு பகுதியில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

பட்டப்பகலில் இறைச்சிக் கடை பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆசிரியை மீது வளர்ப்பு நாயை ஏவி கடிக்கவிட்ட பள்ளித் தாளாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details