தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் பிரமாண்ட சைக்கிள் பேரணி! - தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு

கரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பிரமாண்ட சைக்கிள் பேரணி
பிரமாண்ட சைக்கிள் பேரணி

By

Published : Oct 23, 2021, 11:25 AM IST

திருவள்ளூர் : கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம்இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணையும் (70 சதவீதம்), இரண்டாவது தவணை (30 சதவீதம்) போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசிகள் போட வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் தலைமையில் பிரமாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணி பூங்கா நகர் மெயின் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நிறைவடைந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “இம்மாவட்டத்தில் முதல் தவணை 70 சதவீதமும், இரண்டாவது தவணை 30 சதவீதம் போடப்பட்டுள்ளது.

தற்போது வெளிமாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட தொய்வே, தடுப்பூசி எண்ணிக்கையில் பின்தங்க காரணம்- மா. சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details