திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலூன், ஸ்பா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. இந்தச் சலூனில் பாலியல் தொழில் நடப்பதாகத் திருவள்ளூர் வட்டாரக் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று இரவு அதிரடியாகச் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதிசெய்யப்பட்டது.
திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: நால்வர் கைது - திருவள்ளூர் வட்டாரக் காவல்துறை நடவடிக்கை
திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்பட நான்கு பேரை திருவள்ளூர் வட்டாரக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்
திருவள்ளூர் வட்டாரக் காவல்துறை
இதனை அடுத்து, கடையின் உரிமையாளர் ரபிக் (25), இஸ்ரா அலி (21) உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ரபிக், இஸ்ரா அலி ஆகியோர் திருவள்ளூர் கிளைச் சிறையிலும், உரிமையாளரைப் புழல் சிறையிலும் அடைத்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தவரைப் பெண்கள் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!