திருவள்ளூர் மாவட்டம் சிங்கிலிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1962ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி தற்போது பாழடைந்த நிலையில் இருந்ததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க உதவுமாறு ‘அறம்செய்ய விரும்பு’ அறக்கட்டளை மூலம் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தார்.
‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்’ - ஜி. ராமகிருஷ்ணன் - g ramakrishnan addressing press
திருவள்ளூர்: அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், 20 மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மூலம் 15 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. ஆனால் பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க 21 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால், மீதமுள்ள தொகையை தலைமையாசிரியர் பாஸ்கர் கொடுத்து புதுப்பித்துள்ளார். இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பள்ளி கட்டடத்தை நேரில் பார்வையிட்டு தலைமை ஆசிரியரைப் பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசுப் பள்ளிகளை அரசு பாதுகாக்க வேண்டும். 20 மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடக்கூடாது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு சிறப்பாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் வகை செய்ய வேண்டும்’ என்றார்.