தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்! - ட்ரீம் இந்தியா

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருவள்ளூரில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

Marathon Awareness Against Child Abuse in thiruvallur
திருவள்ளூரில் குழந்தைகள் வன்கொடுமைக்கான எதிரான விழிப்புணர்வு மாரத்தான்!

By

Published : Mar 10, 2020, 8:03 PM IST

வன்கொடுமைக்கான எதிரான விழிப்புணர்வு மாரத்தான் திருவள்ளூர் நற்பணிக்குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

நற்பணிக்குழு சார்பாக ட்ரீம் இந்தியா தினகர் பாபு தலைமை தாங்கிய இந்த மாரத்தான் போட்டியை திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டி டி.ஆர்.பி.சி.சி.சி பள்ளியில் தொடங்கி மெய்யூர் வரை சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் குழந்தைகள் வன்கொடுமைக்கான எதிரான விழிப்புணர்வு மாரத்தான்!

இதில் மூன்று விதமான போட்டிகள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ட்ரீம் இந்தியா பெண்கள் அறக்கட்டளையின் தலைவி கல்பனா, பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :கிணற்றில் தவறி விழுந்த பூனை: போராடி மீட்ட தீயணைப்புத் துறை!

ABOUT THE AUTHOR

...view details