தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு!

திருவள்ளூர்: மாங்காடு அருகே தனியார் தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் 30 பவுன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

mangadu theft
mangadu theft

By

Published : Dec 22, 2019, 11:42 AM IST

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமரநாதன்(30). தனியார் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் அமரநாதன்.

இன்று காலை வீட்டை பூட்டி விட்டு கமல நாதன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் உடைந்திருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொலைக்காட்சி ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையனர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details