தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் செல்போன் டவரில் படுத்து உறங்கிய வாலிபர்! - cell phone tower

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் செல்போன் டவரின் உச்சியில் படுத்து தூங்கிய வாலிபரை தீயணைப்பு துறையினரும், காவல் துறையினரும் பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர்

By

Published : Oct 5, 2019, 10:23 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாவூரை சேர்த்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பிரியன். திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு நேற்று குடிபோதையில் வந்தவனை விரட்டி விட்டனர். இந்நிலையில் மாலை திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி படுத்துக் தூங்கிய பிரியனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடிபோதையில் செல்போன் டவரில் படுத்து உறங்கிய வாலிபர்

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கும் , தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் தேவதாஸ், தீயணைப்பு துறை அலுவலர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து செல்போன் டவரில் இருந்து பிரியனை பத்திரமாக மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட இளைஞருக்கு ரூ.5 கோடி அபராதம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details