திருவள்ளூர் மாவட்டம் குன்னவளம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின்பேரில், திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி கல்பனா தத் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு அடுப்பு பானைகள், மூலப்பொருள்கள் ஆகியவற்றை வைத்து சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள், காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தெறித்து தப்பி ஓடினார்கள். ஒருவர் மட்டுமே காவல்துறையினரிடம் சிக்கினார்.