திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவியும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இதனால் சரவணனும் அவரது மனைவியும் தேவி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். சரவணன் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே, தேவியிடம் சரவணன் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரவணன் பணத்தை திருப்பித் தராமல் இருந்துள்ளார். இது குறித்து தேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.