திருவள்ளூர்: ஆந்திரா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு எல்லையான கனகம்மாச்சத்திரம் வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. அதன் பேரில் கனகம்மாச்சத்திரம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் காவல்துறையினர் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ. 8 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்திய நபர் கைது - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் 8 லட்சம் மதிப்பிலான 27 செம்மரக்கட்டைகளை கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது வி.என். கண்டிகை என்ற இடத்தில் அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் 27 செம்மரக்கட்டைகளை அடுக்கி வைத்தவாறு கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் சரவணன் என்றும் தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: எல்லையில் யோகாசனம் செய்யும் பெண் ராணுவத்தினர்!
TAGGED:
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்