கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் கஞ்சா, உலர் மண்புழு மற்றும் செம்மரக் கடத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி கும்மிடிப்பூண்டி எல்லை சரக காவல்துறையினர் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லூரில் இருந்து தமிழ்நாடு வந்த 103-N வழித்தட பேருந்தில் பாதிரிவேடு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பேருந்தில் இருந்த எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.