தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்றவர் கைது! - Man held for selling cannabis

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Man arrested for selling cannabis
Man arrested for selling cannabis

By

Published : Oct 16, 2020, 3:07 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் 20. இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் ஸ்ரீதரை கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அண்ட வாயில் ஏரிக்கரை மீது ஸ்ரீதர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் ஸ்ரீதரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஸ்ரீதரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details