திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, கும்மிடிப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், அப்பகுதியில் அதிரடி ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பையில் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.