திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் செயலில், அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள், அப்பெண்னை அழைத்து விசாரித்தபோது நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார்.