திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கராேனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இதனால், தினந்தோறும் வேலைக்கு சென்றால் தான் கூலி என்ற நிலையில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் பசியும் பட்டினியுமாக கிடக்கும் அவலநிலையும் ஏற்பட்டது.
இவர்களது நிலைமையை அறிந்த மனித அறக்கட்டளையைச் சார்ந்த அனைவரும் அந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.