திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காக ஊரகத் தொழில்துறை அமைச்சரும், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினருமான பென்ஜமின், மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.22 லட்சத்து 43 ஆயிரத்தை ஒதுக்கியுள்ளார். இந்த தொகை மூலம் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன.
பள்ளி, அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பென்ஜமின்! - ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்
திருவள்ளூர்: மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடியும், பள்ளிக் கட்டடமும் கட்டுவதற்கு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் அடிக்கல் நாட்டினார்.

அங்கன்வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டிய அமைச்சர் பெஞ்சமின்
பள்ளி, அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பென்ஜமின்
இதனை, அமைச்சர் பென்ஜமின் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நெற்குன்றம் பகுதியில் ரூ.18 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் தொடங்க உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் அம்மா திருமண மண்டபம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
Last Updated : Aug 30, 2019, 12:03 PM IST