தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உள்பட மூவருக்கு சிறை! - உதவி ஆய்வாளர் கைது

திருவள்ளூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார், உள்ளிட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உதவி ஆய்வாளர்
உதவி ஆய்வாளர்

By

Published : Jun 25, 2021, 2:46 PM IST

திருவள்ளூர்:வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் காசிமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு இவர் மாதவரம் பகுதியில் பணிபுரிந்து வந்தார். தேர்தல் நேரத்தில் இவர் காசிமேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மூன்று நாள்கள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் உயர் அலுவலர்களின் வாய்மொழி உத்தரவையடுத்து மாதவரம் துணை ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில் சதீஷ்குமார் ஏற்கனவே மாதவரத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள ரேவதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொடர்பு ரேவதியின் சகோதரி நீலாவதி உடன் தொடர்ந்தது. நீலாவதியுடன் ஏற்பட்ட தொடர்பு ரேவதியின் மகளான 15 வயது சிறுமிக்குத் தெரியவந்துள்ளது.

உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது:

இதனையறிந்த சிறுமியை தந்தையிடம் சொல்லக்கூடாது என அவரது தாயார் ரேவதி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலில் அச்சமடைந்த சிறுமி இந்த சம்பவத்தை தந்தையிடம் கூறவில்லை. இதில் எல்லை மீறிய சதீஷ்குமார் சிறுமியிடமும் பாலியல் சேட்டைகள் செய்துள்ளார். மேலும், இதை தந்தையிடம் கூறினால், அவருடன் உன்னை அனுப்பிவைத்து விடுவேன் என ரேவதி சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால், என்ன செய்வதென தெரியாமல் பயத்திலிருந்த சிறுமி, ஒரு கட்டத்தில் இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தது, அதற்கு சிறிமியின் தாயே உறுதுணையாக இருந்தது என அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.

மூவருக்கும் சிறை:

உடனடியாக சதீஸ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

ABOUT THE AUTHOR

...view details