திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுகூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டார்.நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமித்ஷா வின் கருத்துகளை எதிர்கட்சிகள் தவறுதலாக புரிந்து கொண்டு பேசுகின்றனர்.
இந்தி தினத்தில் அவர் பேசும் போது, 'இந்தியாவின் முகமாக ஒரு மொழி இருக்க முடியும் என்றால் அது இந்தியாகத்தான் இருக்கமுடியும்' என்று தெரிவித்தார். ஆனால் அவர் சட்டம் போடுவேன் என்றோ மொழியை திணிப்பேன் என்றோ கூறவில்லை. தமிழால் வளர்ந்த திமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது எத்தனை அகழாய்வுகள் நடைபெற்றது.ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை கூட திமுக ஆட்சியில் சமர்ப்பிக்கவில்லை.