திருவள்ளூர் அரசு தலைமை தபால் நிலையம் அருகே திருவள்ளூர் புங்கத்தார் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் செல்வராஜ் (28), பத்தியால்பேட்டை ஏழுமலை என்பவரது மகன் அஜித் (25) இருவரும் கட்டிட சம்பந்தப்பட்ட வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களது இருசக்கர வாகனத்தை முந்தி சென்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் செல்வராஜ், அஜித் இருவரும் சுமார் நூறு மீட்டர் அளவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் இருவரும் உயிரிழந்ததை அறிந்து திரும்பிச் சென்றது.