திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவயல் சந்திப்பு பகுதியில் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தலாரி, சாலையில் தறிக்கெட்டு ஓடி எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி
திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த பாலவாயல் சந்திப்பில் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
விபத்து நடந்த இடம்
இந்த விபத்தில் இருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.