தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

By

Published : Jul 8, 2020, 3:31 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பேட்டை மேடு கிராமத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தாமரைப்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், வெங்கல் கிராமத்திலிருந்து பெரியபாளையம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் ஒன்று லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த இருவர், சரக்கு வாகன ஓட்டுநர், லாரி ஓட்டுநர் என நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் காரில் பயணித்த வெங்கலை சேர்ந்த தீனதயாளன் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details