திருவள்ளூர் : தமிழ்நாடு அரசின் நிதி மதிப்பீடுகளை ஆராய 19 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட பேரவையில் நிதி மதிப்பீட்டுக் குழு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா தலைமையில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, கோவை வடக்கு அம்மன் கே அர்ஜுனன், சேலம் மேற்கு அருள், கும்பகோணம் அன்பழகன், தளி ராமச்சந்திரன், திருச்செங்கோடு ஈஸ்வரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் எழிலரசன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், திருவிக நகர் தாயகம் கவி, பழனி செந்தில்குமார், நாகப்பட்டினம் முகமது ஷாநவாஸ், மயிலாடுதுறை ராஜ்குமார், மதுரை மேற்கு ராஜி உள்ளிட்ட 19 உறுப்பினர்களை கொண்டது இந்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு.
சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
இந்த குழுவானது, திருவள்ளூர் பூந்தமல்லி படூர் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள், பண்ணை குட்டை, ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள், ஈக்காடு பகுதியில் தோட்டக்கலைத் துறையின் பண்ணை, திருவள்ளூர் கொழுந்தலூர் பகுதியில் அரசு விதைப்பண்ணை, விதை சுத்திகரிப்பு நிலையம், திருவலாங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பாடு, திருவலாங்காடு ஊரக சாலை திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பாலம் ஆகியவற்றை காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர்.