தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ரூபாய் நோட்டுகளால் முதியவரை ஏமாற்றிய கொள்ளை கும்பல்! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி ஆற்காடு குப்பம் அருகே ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து ஆடு மேய்ப்பன் இடமிருந்து ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

robbers gang
robbers gang

By

Published : Jun 22, 2021, 7:27 PM IST

Updated : Jun 29, 2021, 7:55 PM IST

திருவள்ளூர்: ஆற்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (56). இவர் தனக்கு சொந்தமான 30 ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த பெண் உட்பட இரண்டு ஆண்கள், முதியவர் இடத்தில் எங்களுக்கு நான்கு ஆடுகள் விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதனை ஒப்புக்கொண்டு நான்கு ஆடுகளின் விலை 68 ஆயிரம் ரூபாய் என்றார். அதற்கு அவர்கள் இரண்டாயிரம் குறைத்துக்கொண்டு 66 ஆயிரத்துக்கு நான்கு ஆடுகளை வாங்கிக்கொள்கிறோம் என கூறி 33 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை முதியவரிடத்தில் வழங்கிவிட்டு ஆடுகளை ஏற்றி சென்றுவிட்டனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த முனுசாமி, தனது கையில் வைத்திருக்கும் பணத்தை வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை பார்த்ததும் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு: நாளை கடைசி நாள்!

Last Updated : Jun 29, 2021, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details