தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் ரகுபதி - Chief Minister Stalin has been the Super Chief Minister of India

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய திமுக அரசு உறுதுணையாக இருக்கும் எனறும், இந்தியாவில் சூப்பர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருந்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்
இந்தியாவில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்

By

Published : Nov 29, 2021, 9:16 PM IST

திருவள்ளூர்: பூண்டியை அடுத்த பட்டரைபெரும்புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.29) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 500க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழி வழக்காடு மொழியாக இருந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகக் கொண்டு வர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு முயற்சி எடுப்பார்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா

சமூக நீதிக்குக் குரல் கொடுப்பது தமிழ்நாடு

மேலும், இந்தியாவிலேயே முதல் முதலாக 1997 ஆம் ஆண்டு சட்டப் பல்கலைக்கழகம் கொண்டு வந்து அதற்கு அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயர் சூட்டியது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், இந்தியாவில் சூப்பர் முதல்வராக மு.க. ஸ்டாலின் இருந்து வருவதாகவும் கூறினார். இந்தியாவில் சமூக நீதிக்குக் குரல் கொடுப்பது தமிழ்நாடு என்றும், சமூகநீதி காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு உண்டு" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்டாலின் முயற்சி வெற்றி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 700 கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வெற்றி பெறுவார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய இடம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய திமுக அரசு உறுதுணையாக இருக்கும்" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டக் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:கோட் போடுவது ரீப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு: ஸ்டாலினை கிண்டலடித்த ஜெயகுமார்

ABOUT THE AUTHOR

...view details