தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: அம்மா மினி கிளினிக் சேவையை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தொடங்கிவைத்தார்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்
அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

By

Published : Jan 6, 2021, 6:46 AM IST

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், 'அம்மா மினி கிளினிக்' கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது அம்மா மினி கிளினிக் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 53 அம்மா மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 18 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

இதனை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் தொடங்கிவைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் 43 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details