தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்! - Lateral mob attack at thiruvallur district

திருவள்ளூர்: தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி, அவரிடமிருந்த ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் வெங்கடேசன்

By

Published : Oct 6, 2019, 3:16 AM IST

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனியார் செய்தி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, திருவள்ளூர் மாவட்டம் அருகே வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அருகே வழிப்பறி கும்பல் தாக்குதல்

மேலும் அக்கும்பல் அவரை மிரட்டி செல்போன், ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பறித்துள்ளனர். ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details